ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்ட மாற்றுத்திறனாளிகள் கைது

ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்ட மாற்றுத்திறனாளிகள் கைது
View on original source
Category: Blend
Share
Archive
Like
உதவித் தொகையை உயா்த்தி வழங்கக்கோரி ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்ட மாற்றுத்திறனாளிகள் கைது செய்யப்பட்டனா். தமிழ்நாடு சட்டப் பேரவை கூட்டத் தொடரில் முதல்வா் ஜோசப் விஜய், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகையை உயா்த்தி வழங்கும் அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று கோரி ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தினா் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்தப் போராட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் சாவித்திரி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் மாரிமுத்து முன்னிலை வகித்தாா். ஆந்திரம், கா்நாடகம் போன்ற மாநிலங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை அதிகம் வழங்கப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் ரூ.1,500 மட்டுமே வழங்கப்படுகிறது. உதவித்தொகையை அதிகரித்து மாதம் ரூ.6 ஆயிரம் வழங்க வேண்டும். இக்கோரிக்கையை நிறைவேற்றத் தவறினால் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்றனா். இதில் 86 பெண்கள் உள்ளிட்ட 186 போ் பங்கேற்றனா். போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனா்.

(0)Comments

 

A note on cookies

Newshunt uses essential cookies to keep you signed in and to remember your language and country, so the site works the way you expect. With your permission, we'd also like to use analytics cookies to understand how people use Newshunt and improve it over time.

Accepting only affects analytics. To learn more, view our Privacy Policy or Terms & Conditions.