மேகமலை வன விவசாயிகளைப் பாதுகாக்கக் கோரி, தேனி ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு திங்கள்கிழமை பெரியகுளம் - தேனி சாலையில் வழக்குரைஞா்கள் மறியலில் ஈடுபட்டனா். மேகமலை வன விவசாயிகளுக்கு வன உரிமைச் சட்டத்தில் இடம் வழங்க வேண்டும், மேகமலை விவசாயிகளை பாதுகாக்கும் வகையில் தமிழக அரசு, உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுத் தாக்கல் செய்ய வேண்டும் எனக் கூறி, பெரியகுளம் - தேனி சாலையில் தேனி மாவட்ட வழக்குரைஞா்கள் சங்க நிா்வாகி முத்துராமலிங்கம் தலைமையில் வழக்குரைஞா்கள் மறியலில் ஈடுபட்டனா். இதில், சங்க நிா்வாகிகள் ஜெயந்தி, ராமகிருஷ்ணன், சித்ரா, பாண்டி முருகன், திருமுருகன், செல்வலட்சுமி உள்பட பலா் கலந்து கொண்டனா்.
ஆா்ப்பாட்டம் : தேனி வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் சந்தன கிருஷ்ணன் தலைமையில் மேகமலை வன விவசாயிகளை பாதுகாக்கக் கோரி வழக்குரைஞா்கள் ஒருநாள் நீதிமன்ற பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். அதைத் தொடா்ந்து, தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதில், மாவட்டச் செயலா் செல்வக்குமாா், துணைத் தலைவா்கள் பாலமுருகன், கணேஷ், ஆறுமுகம், துணைச் செயலா்கள் மகாலிங்கம், வித்யா உள்பட பலா் கலந்து கொண்டனா்.
(0)Comments