மகளிர் ஆசிய கோப்பை: ஹாங் காங்-ஐ பந்தாடிய பாகிஸ்தான் மகளிர் அணி - 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

மகளிர் ஆசிய கோப்பை: ஹாங் காங்-ஐ பந்தாடிய பாகிஸ்தான் மகளிர் அணி - 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
View on original source
Category: Sports
Share
Archive
Like
மகளிர் ஆசிய கோப்பை 2026 டி20 கிரிக்கெட் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் க்ரூப் பி பிரிவில் இடம்பெற்றுள்ள பாகிஸ்தான் மற்றும் ஹாங் காங் மகளிர் அணிகள் களம்கண்டன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் மகளிர் அணி பேட்டிங் தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் மகளிர் அணிக்கு தொடக்கம் கொடுத்த முனீபா அலி 6 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இவருடன் களமிறங்கிய ஷவால் சுல்ஃபிகர் அதிரடியாக ஆடி 35 பந்துகளில் 47 ரன்கள் (6 பவுண்டரிகள்) விளாசினார். பிறகு ஜாய்லீன் கௌர் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார். பிறகு களமிறங்கிய கல் ஃபெரோஸா 3 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து களமிறங்கிய ஆயிஷா சஃபார் 19 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பிறகு வந்தவர்களில் துபா ஹாசன் மட்டும் 14 ரன்கள் எடுக்க மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார். கேப்டன் ஃபாதிமா சனா மட்டும் 24 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இதையடுத்து பாகிஸ்தான் மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 143 ரன்களை எடுத்தது. ஹாங் காங் மகளிர் அணி சார்பில் சிறப்பாக பந்துவீசிய ஜாய்லீன் கௌர் 4 விக்கெட்டுகளையும், இக்ரா சஹர் மற்றும் கேரி சான் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 144 எனும் எளிய இலக்கை துரத்திய ஹாங் காங் மகளிர் அணிக்கு தொடக்கம் கொடுத்த கேப்டன் நடாஷா மைல்ஸ் 1 ரன்னுக்கும், மரிகோ ஹில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து களமிறங்கிய யாஸ்மின் தாஸ்வானி 13 ரன்களிலும், கேரி சான் 47 பந்துகளில் 30 ரன்களை எடுத்தார். இவர்களைத் தொடர்ந்து களமிறங்கியவர்களில் ஜாய்லீன் கௌர் மட்டுமே 10 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் ஹாங் காங் அணி 19 ஓவர்கள் முடிவில் வெறும் 71 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால், பாகிஸ்தான் மகளிர் அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் மகளிர் அணி சார்பில் நஷ்ரா சந்து 6 விக்கெட்டுகளையும், ஃபாதிமா சனா, சதியா இக்பால், உம் இ ஹானி மற்றும் ஆயிஷா சஃபர் தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.

(0)Comments

 

A note on cookies

Newshunt uses essential cookies to keep you signed in and to remember your language and country, so the site works the way you expect. With your permission, we'd also like to use analytics cookies to understand how people use Newshunt and improve it over time.

Accepting only affects analytics. To learn more, view our Privacy Policy or Terms & Conditions.