பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலக வளாகம்: 25 ஏக்கர் நிலத்தை வழங்க முன்வந்த வீட்டு வசதி வாரியம்

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலக வளாகம்: 25 ஏக்கர் நிலத்தை வழங்க முன்வந்த வீட்டு வசதி வாரியம்
View on original source
Category: Business
Share
Archive
Like
இதனைத் தொடர்ந்​து, அரசு சார்​பில் சென்னை பட்​டினப்​பாக்​கம் கடற்​கரையை ஒட்​டி​யுள்ள அரசுக்கு சொந்​த​மான ஃபோர்​ஷோர் எஸ்​டேட்​டில் புதிய சட்​டப்​பேரவை மற்​றும் தலை​மைச் செயலக வளாகம் அமைக்க அரசு முடிவு செய்​துள்​ள​தாக தகவல் வெளி​யாகி​யுள்​ளது. இத்​திட்​டத்தை தொடங்​கு​வதற்​கான பணி​களை தமிழக அரசு தீவிரப்​படுத்​தி​யுள்​ளது. அதன் ஒரு பகு​தி​யாக தமிழ்​நாடு வீட்டு வசதி வாரி​யம் இத்​திட்​டத்​துக்கு தனது 25.16 ஏக்​கர் நிலத்தை வழங்​க​வும், சென்னை மாநக​ராட்​சி, அதன் சுமார் 1 ஏக்​கர் நிலத்தை வழங்​க​வும் இசைவு தெரி​வித்​துள்​ளன. இத்​திட்​டத்​துக்​கான நிர்​வாக ஒப்​புதலை விரை​வில் அரசு வழங்க உள்​ளது. இந்த புதிய தலை​மைச் செயலக வளாகம் 15 தளத்​தில் சுமார் 20 லட்​சம் சதுரடி கட்​டு​மான பரப்​பள​வில் கட்​டப்பட உள்​ளது. இந்த இடத்​தின் சந்தை மதிப்பு சுமார் ரூ.2 ஆயிரம் கோடி. அரசு சார்​பில் முதலில் பட்டினப்பாக்கம், கிண்​டி​யில் உள்ள நெடுஞ்​சாலை ஆராய்ச்சி நிலை​யம் மற்​றும் நந்​தம்​பாக்​கம் ஃபின்​டெக் சிட்டி அரு​கிலுள்ள இடம் ஆகிய 3 இடங்​கள் பரிசீலிக்​கப்​பட்​டது. இதில் 25 ஏக்​கர் நிலம் கிடைப்​ப​தால் பட்டினப்பாக்கம் தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளது. இந்த இடத்​துக்கு அருகே முதல்​வர் விஜய்​யின் இல்​லம் இருப்​பது குறிப்​பிடத்​தக்​கது. இந்த நிலம் அரசு குடி​யிருப்​பு​கள் அமைப்​ப​தற்​காக 1958-ம் ஆண்டு கையகப்​படுத்​தப்​பட்​டது என்பது குறிப்பிடத்தக்கது.

(0)Comments

 

A note on cookies

Newshunt uses essential cookies to keep you signed in and to remember your language and country, so the site works the way you expect. With your permission, we'd also like to use analytics cookies to understand how people use Newshunt and improve it over time.

Accepting only affects analytics. To learn more, view our Privacy Policy or Terms & Conditions.