திமுக We Miss You.. வாங்க சண்டை போடுவோம்!.. சட்டசபையில் ஆதவ் அர்ஜுனா பேச்சு..

திமுக We Miss You.. வாங்க சண்டை போடுவோம்!.. சட்டசபையில் ஆதவ் அர்ஜுனா பேச்சு..
View on original source
Category: Politics
Share
Archive
Like
திமுக We Miss You.. வாங்க சண்டை போடுவோம்!.. சட்டசபையில் ஆதவ் அர்ஜுனா பேச்சு.. Written By: மகேந்திரன் Updated: Tue, 8 Sep 2026 (21:52 IST) google-news தவெக ஆட்சிக்கு வந்தது முதலே தமிழக சட்டசபை களைகட்டி வருகிறது. தவெக அமைச்சர்கள் தவெக மீது ஊழல் புகார்களை கூற அதை உதயநிதி உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏக்கள் மறுக்க பரபரப்பாக செயல்பட்டு வருகிறது. அதிலும், தவெக ஆட்சிக்கு வந்தபின் சட்டசபை நிகழ்வுகள் நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது. எனவே, சட்டசபையில் என்ன நடக்கிறது என்பதை மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். நேற்று சட்டசபையில் பேசிய முதல்வர் விஜய் சர்காரியா கமிஷனில் திமுக மீது சொல்லப்பட்ட குற்றச்சாட்டுகள், டாஸ்மாக் ஊழல் தொடர்பாக அமலாக்கத்துறை அறிக்கையில் கூறப்பட்ட விஷயங்கள் என பலவற்றையும் பேசியிருந்தார். மேலும், கடந்த ஆட்சியில் கட்சி நிதி என்கிற பெயரில் உதயநிதி, ஸ்டாலின் ஆகியோருக்கு பணம் சென்றது என கூறினார். இதற்கு பதிலளிக்க உதயநிதி அனுமதி கேட்டார். ஆனால், சபாநயகர் அனுமதி கொடுக்கவில்லை. எனவே, திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். அதேபோல், இந்த கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று முதல்வர் விஜய் ஆதாரமில்லாமல் பேசியதாக கூறி திமுக முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு மற்றும் எ.வ.வேலுமணி ஆகியோர் கூறி அவர் பேசியதை அவைக்குறிப்பிலிருந்து நீக்குமாறு கோரிக்கை வைத்தனர். ஆனால், சபாநாயகர் மறுக்கவே அவர்கள் வெளிநடப்பு செய்தனர். அதன்பின் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா 'நெடுஞ்சாலத்துறை, பொதுப்பணித்துறை என்றாலே ஊழல் நிறைந்ததாக இருந்தது. அதை மாற்றி ஊழலே இல்லாமல் இருக்க முயற்சி செய்து வருகிறோம்.. திமுக We Miss you.. மறுபடியும் வாங்க. சண்டை போடுவோம்.. மக்களுக்காக' என்று ஜாலியாக பேசினார். About Writer மகேந்திரன் 14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More அடுத்த கட்டுரையில் என்னோட பாடி லாங்வேஜ்ல உள்நோக்கம் இல்லை!.. தப்பா எடுத்துக்காதீங்க!.. விஜய் டிவிட்!... வெப்துனியாவைப் படிக்கவும் : செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

(0)Comments

 

A note on cookies

Newshunt uses essential cookies to keep you signed in and to remember your language and country, so the site works the way you expect. With your permission, we'd also like to use analytics cookies to understand how people use Newshunt and improve it over time.

Accepting only affects analytics. To learn more, view our Privacy Policy or Terms & Conditions.