பேரவையில் முதல்வர் விஜய் ஆவேசம்: சர்க்காரியா கமிஷன், அமலாக்கத் துறை அறிக்கைகளை சுட்டிக்காட்டி திமுக மீது சரமாரி குற்றச்சாட்டு

பேரவையில் முதல்வர் விஜய் ஆவேசம்: சர்க்காரியா கமிஷன், அமலாக்கத் துறை அறிக்கைகளை சுட்டிக்காட்டி திமுக மீது சரமாரி குற்றச்சாட்டு
View on original source
Category: Politics
Share
Archive
Like
திமுகவுக்கு எப்போதும் ஒரு பழக்கம் உண்டு, ஆதாரத்தைப் பக்கத்திலேயே வைத்துக்கொண்டு மற்றவர்களிடம் போய் தேடுவார்கள். அப்படித்தான் நான் 'பார்ட்டி ஃபண்ட்' என்று சொன்னதும் ஆதாரம் கேட்டார்கள். ஆதாரம் பக்கத்திலேயேதான் இருக்கிறது. திமுக ஆட்சியில் இருந்தபோது அமலாக்கத் துறை அளித்த 100 பக்க அறிக்கையில் நகராட்சி நிர்வாகத் துறையில் ஒப்பந்ததாரர்களிடம் இருந்து பார்ட்டி ஃபண்ட் என்ற பெயரில் 7.5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை லஞ்சம் வசூலிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது. இதன் நேரடிப் பயனாளிகளாக அப்போதைய முதல்வர் ஸ்டாலினும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் இருந்துள்ளனர் என்று அறிக்கை கூறுகிறது. இன்னொரு துறையின் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதாகவும் கூறப்பட்டுள்ளது. டாஸ்மாக்கை கையில் வைத்திருந்த அமைச்சருடன் சேர்ந்து சில ஐஏஎஸ் அதிகாரிகளும் இதில் ஈடுபட்டுள்ளனர். அதில் ரத்தீஷ் என்பவர் 'பவர் புரோக்கராக' இருந்துள்ளார். அவரது உத்தரவுப்படி தான் டாஸ்மாக் மேலாண் இயக்குநராக இருந்த ஐஏஎஸ் அதிகாரியே செயல்பட்டார் என அமலாக்கத் துறை தெரிவிக்கிறது. இந்த அரசு வந்தவுடன் துபாயில் போய் ஒளிந்துகொண்டார். இவர் யாருக்கு நெருக்கமானவர்? யாருடைய அறிவுரைப்படி செயல்பட்டார்? கடவுளுக்குத்தான் வெளிச்சம். முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியும் அவரது சகோதரர் அசோக் குமாரும் தங்கள் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி டாஸ்மாக் பார்கள், போக்குவரத்து டெண்டர்கள், மின்வாரியப் பணிகளில் பெரும் முறைகேடுகள், சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனைகளிலும் ஈடுபட்டனர். இந்த 2 துறை கோப்புகளைத் திறந்ததற்கே இப்படி என்றால், மற்ற துறை கோப்புகளைத் திறந்தால் எத்தனை பூதம் கிளம்புமோ தெரியவில்லை.

(0)Comments

 

A note on cookies

Newshunt uses essential cookies to keep you signed in and to remember your language and country, so the site works the way you expect. With your permission, we'd also like to use analytics cookies to understand how people use Newshunt and improve it over time.

Accepting only affects analytics. To learn more, view our Privacy Policy or Terms & Conditions.