புதுடெல்லி: முதியோர் இல்லங்களை நாடு முழுவதும் அமைக்க வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவானது உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்ஷி மற்றும் வி.மோகனா ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அச்வினி குமார், ''இந்த வழக்கை விரைந்து விசாரித்து உத்தரவிட வேண்டும் என்று பலமுறை முறையிடப்பட்டது. ஆனால் மத்திய அரசு முழுமையான பிரமாணப் பத்திரத்தை இந்த விவகாரத்தில் தற்போதுவரை தாக்கல் செய்யவில்லை என்று தெரிவித்தார். இதைத்தொடர்ந்து தலைமை நீதிபதி சூர்யகாந்த், ''இந்த விவகாரத்தில் நீதிமன்றம் வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து அதனை செயல்படுத்த உயர்நீதிமன்றங்களுக்கு உத்தரவிடும். மேலும் முதியோர் இல்லங்களை அமைப்பது மற்றும் அவற்றில் தேவையான வசதிகளை வழங்குவது தொடர்பான தற்போதைய நிலை குறித்த விரிவான பதிலை நிலை அறிக்கையாக நான்கு வாரத்துக்குள் மத்திய மற்றும் மாநில அரசுகள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.
அதேப்போன்று இதுதொடர்பாக அனைத்தி மாநில அரசுகளின் தலைமை வழக்கறிஞர்களை தொடர்பு கொண்டு அவர்களது பதிலை, மத்திய அரசு அறிக்கையாக சமர்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.
(0)Comments