சென்னை: தமிழ்நாடு முதலமைச்சராக பதவி ஏற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் 110 விதியின் கீழ் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறார். பெண்களுக்கு வெற்றிப் பயணம், பால் கொள்முதல் விலை உயர்வு, புதிய தலைமைச் செயலகம் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை முதல்வர் 110 விதியின் கீழ் வெளியிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
2026 தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக்கழக தலைவர் தலைவரும் முதல் வருமான விஜய் அரசு தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கிறது. கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி தொடங்கிய பட்ஜெட் கூட்டத் தொடர் 21 நாட்களுக்குப் பிறகு இன்றுடன் நிறைவடைந்தது.
இந்தக் கூட்டத் தொடரில் பொது பட்ஜெட், வேளாண் பட்ஜெட், துறை ரீதியான மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்றது. மேலும் அரசினர் தீர்மானங்கள், பல்வேறு சட்ட மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டது.
மேலும் முதன்முறையாக பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்ற முதலமைச்சர் விஜய் 110 விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறார். அதில் முக்கியமான சில அறிவிப்புகள் குறித்து பார்க்கலாம்..
*ரூ.6,220 கோடி வரையிலான பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்து அறிவிப்பை வெளியிட்டார்.
*ஆகஸ்ட் 17 அன்று கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க்கடன்களில் ரூ.75 ஆயிரம் வரை முழுமையான தள்ளுபடி.
*மருத்துவக் காப்பீடு ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.25 லட்சம்
ஆகஸ்ட் 19 அன்று முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட வரம்பு ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தப்பட்டது.
*பெரம்பூரில் ரூ.300 கோடியில் 400 படுக்கைகளுடன் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை, ரூ.351 கோடியில் ஏழு புதிய அரசு செவிலியர் கல்லூரிகள் உள்ளிட்ட மருத்துவக் கல்வி வசதிகள்.
*ரூ.673.44 கோடியில் முதலமைச்சரின் புற்றுநோய் பராமரிப்பு இயக்கம்.
*எம்.எல்.ஏ.க்களுக்கு அரசு வாகனம் - அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அரசு வாகனம், மாதம் ரூ.75 ஆயிரம் வாகனப் படி, ரூ.25 ஆயிரம் உதவியாளர் படி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
*ஆண்டுக்கு 3 இலவச சிலிண்டர்கள் - ஆகஸ்ட் 24 அன்று தகுதியுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆண்டுக்கு மூன்று இலவச LPG சிலிண்டர்கள் வழங்கப்படும் என்று அறிவித்தார்.
*ஒரு கோடிக்கும் அதிகமான குடும்பங்கள் பயன்பெறும் என்றும், ஆண்டுக்கு சுமார் ரூ.4,000 கோடி செலவாகும் என்றும் அரசு மதிப்பிட்டது.
*பெண்களுக்கு 'வெற்றிப் பயணம்' - பெண்கள் மற்றும் திருநர்களுக்கான கட்டணமில்லாப் பேருந்துப் பயணத் திட்டம் அக்டோபர் 2 முதல் மேலும் விரிவுபடுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
*சாதாரணப் பேருந்துகளுடன் Express, LSS, Deluxe மற்றும் குறிப்பிட்ட புறநகர், மலைப்பகுதி பேருந்துகளுக்கும் திட்டம் விரிவுபடுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கான ஆண்டு செலவு சுமார் ரூ.6,000 கோடி என மதிப்பிடப்பட்டது.
*12 நாளில் இரண்டு முறை பால் கொள்முதல் விலை உயர்வு - பால் உற்பத்தியாளர்களுக்கான கொள்முதல் விலை ஆகஸ்ட் 19 அன்று லிட்டருக்கு ரூ.38-லிருந்து ரூ.41 ஆக உயர்த்தப்பட்டது. 12 நாட்களுக்குப் பின்னர் ஆகஸ்ட் 31 அன்று மீண்டும் ரூ.41-லிருந்து ரூ.44 ஆக உயர்த்தப்பட்டது.
*ரூ.55,628 கோடி மின்திட்டங்கள் - மின்துறையில் ரூ.33,066 கோடி மின் தொடரமைப்பு மேம்பாடு, ரூ.20,800 கோடி தூத்துக்குடி Supercritical Thermal Power Station, ரூ.1,762 கோடி சென்னை மின் பகிர்மான மேம்பாடு என மொத்தம் ரூ.55,628 கோடி மதிப்பிலான திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.
* இதுதவிர காஞ்சிபுரம் மதுரமங்கலத்தில் Semiconductor & Electronics Manufacturing Park, கோவையில் ரூ.400 கோடி FinTech Hub, திருச்சியில் Multi-Modal Logistics Hub ஆகிய திட்டங்களும் அறிவிக்கப்பட்டன.
*ரூ.4,800 கோடி கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம், 2 நகர்ப்புற உள்கட்டமைப்பு அறிவிப்பில் மட்டும் சுமார் 20 முக்கியத் திட்டங்கள் இடம்பெற்றன. மீஞ்சூரில் ரூ.4,800 கோடியில் 400 MLD கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையம், மதுரையில் ரூ.2,400 கோடி பாதாளச் சாக்கடை, நகர்ப்புறச் சாலைகளுக்கு ரூ.1,850 கோடி, நகர்ப்புற உள்ளாட்சிப் பள்ளிகளுக்கு ரூ.335 கோடி உள்ளிட்ட திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.
*செப்டம்பர் 15 முதல் ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெற்ற அன்றே டிஜிட்டல் டிரைவிங் லைசென்ஸ், புதிய வாகனங்களுக்கு டிஜிட்டல் ஆர்சி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
* 2021 மே முதல் 2026 ஏப்ரல் வரை அமைதியான போராட்டங்களில் ஈடுபட்ட விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெறுவதாகவும் விஜய் அறிவித்தார். இதில் திருவண்ணாமலை SIPCOT, பரந்தூர் விமான நிலைய எதிர்ப்புப் போராட்டங்கள் உள்ளிட்டவை குறிப்பிடப்பட்டன.
*புதிய தலைமைச் செயலகம் - செப்டம்பர் 3 அன்று Tamil Nadu Olympic City, Motor Sports City மற்றும் சென்னையில் 20 லட்சம் சதுர அடியில் ரூ.1,200 கோடி மதிப்பில் புதிய ஒருங்கிணைந்த சட்டப்பேரவை-தலைமைச் செயலக வளாகம் அமைக்கப்படும் என அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
(0)Comments