தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் அரசுப் பேருந்து மோதியதில் இரு சக்கர வாகனத்திலிருந்து தவறிவிழுந்த கல்லூரி மாணவி திங்கள்கிழமை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தேனி மாவட்டம், அல்லிநகரத்தைச் சோ்ந்தவா் சதீஸ் குமாா் (40). இவரின் மனைவி சிவராம லட்சுமி (27). இவா், ஆண்டிபட்டியில் உள்ள தனியாா் ஆசிரியா் பயிற்சிப் பள்ளியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தாா். இந்த நிலையில், இவா் தனது கணவா் சதீஸ் குமாருடன் இரு சக்கர வாகனத்தில் கல்லூரிக்குச் சென்றனா். இரு சக்கர வாகனத்தை சதீஸ் குமாா் ஓட்டினாா். ஆண்டிபட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த அரசுப் பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்திலிருந்து தவறிவிழுந்த சிவராமலட்சுமி பேருந்தின் சக்கரம் ஏறியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். சதீஸ் குமாா் காயமடைந்தாா். இதுகுறித்து ஆண்டிபட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
(0)Comments