அருள்காட்சி வழங்கிய வேல் பெருமான் – நல்லூரில் சிறப்பாக நடைபெற்ற சப்பரத் திருவிழா

அருள்காட்சி வழங்கிய வேல் பெருமான் – நல்லூரில் சிறப்பாக நடைபெற்ற சப்பரத் திருவிழா
View on original source
Category: Politics
Share
Archive
Like
வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர தேர்த்திருவிழா நாளைய தினம் புதன்கிழமை காலை மிக சிறப்பாக இடம்பெறவுள்ள நிலையில், இன்றைய தினம்(8) செவ்வாய்க்கிழமை மாலை சப்பர திருவிழா நடைபெற்றது. கடந்த 17ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான திருவிழா தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. சப்பரத் திருவிழா இன்றைய தினம் மாலை 5 மணிக்கு வசந்தமண்டப பூஜை நடைபெற்று , தொடர்ந்து வேல் பெருமான் வள்ளி தெய்வானை சமேதரராய் சப்பரத்தில் எழுந்தருளி , சப்பர திருவிழா இடம்பெற்றது. நாளைய தினம்(9) புதன்கிழமை காலை 06.15 மணிக்கு வசந்தமண்டப பூஜை ஆரம்பமாகி ,தொடர்ந்து ஆறுமுக சுவாமி காலை 07 மணியளவில் தேரில் ஆரோகணித்து பக்தர்களுக்கு அருட்காட்சியளிப்பார். தேர் திருவிழாவின் போது, நாட்டின் பல பாகங்களில் இருந்தும், புலம்பெயர் தேசங்களிலும் இருந்தும் இலட்ச கணக்கான பக்தர்கள் ஆறுமுக சுவாமியின் அருட்காட்சியினை கண்டு களிக்க ஒன்று கூடுவார்கள். காவடிகள் , பிரதட்டைகள் , கற்பூர சட்டி என பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் தமது நேர்த்தி கடன்களை நிறைவேற்றுவார்கள். கொழும்பு- புறநகர்ப் பகுதியில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் காயம் நாமலின் கைதின் பின்னர் விசமிகளால் இலக்கு வைக்கப்படும் தமிழர் கிராமங்கள்! வெளியான காணொளி

(0)Comments

 

A note on cookies

Newshunt uses essential cookies to keep you signed in and to remember your language and country, so the site works the way you expect. With your permission, we'd also like to use analytics cookies to understand how people use Newshunt and improve it over time.

Accepting only affects analytics. To learn more, view our Privacy Policy or Terms & Conditions.