சென்னை: போராட்டத்தில் ஈடுபட்ட பணியாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கியும், பணியிடமாற்றம் செய்தும் டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுபானங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விற்பனை விலையைவிட, கூடுதலாக வசூலிக்கப்படுவதாக நீண்டகாலமாக புகார்கள் இருந்து வருகின்றன.
இது தொடர்பான புகார்களின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில், கடந்த புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் 217 பணியாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு பகுதிகளில் டாஸ்மாக் பணியாளர்கள் கடை யடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே போராட்டத்தில் ஈடுபட்ட பணியாளர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும், அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
மேலும் திருப்பூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பணியாளர்களை வேறு கடைகளுக்கு பணியிடமாற்றம் செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
(0)Comments