ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பலரை இடமாற்றம் செய்தும், அவர்களுக்கான புதிய பணியிடங்களை ஒதுக்கியும் தலைமைச் செயலாளர் எம். சாய் குமார் இன்று (08.09.2026) உத்தரவிட்டுள்ளார். அதன்படி சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் மேலாண்மை இயக்குநராக இருந்த டி. மோகன், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையின் கூடுதல் செயலாளராக மாற்றப்பட்டுள்ளார். சென்னை மாநகராட்சியின் இணை ஆணையராக (சுகாதாரம்) இருந்த ஸ்ரேயா பி. சிங், பள்ளி கல்வித் துறையின் கூடுதல் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். நிதித் துறையின் இணைச் செயலாளராக இருந்த ராஜா கோபால் சுன்கரா, சுற்றுலாத் துறை இயக்குநராகவும், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மேலாண்மை இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக இருந்த சரண்யா அரி, விருதுநகர் மாவட்ட ஆட்சியராக மாற்றப்பட்டுள்ளார். பொன்னேரி கோட்ட சப் - கலெக்டராக இருந்த அப்துல் ரசிக், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். செங்கல்பட்டு கோட்ட சப்-கலெக்டராக இருந்த நல்லசிவன், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராகப் பணியமர்த்தப்பட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக இருந்த ரவிகுமார், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை இணைச் செயலாளராக மாற்றப்பட்டுள்ளார். உதகமண்டலம் சிறப்புப் பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் திட்ட இயக்குநராக இருந்த சங்கீதா, கோவை வணிக வரிகள் துறை இணை ஆணையராக (மாநில வரி) நியமிக்கப்பட்டுள்ளார்.
சுற்றுலாத் துறை இயக்குநராக இருந்த ஜெயசீலன், சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் மேலாண்மை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். விருதுநகர் மாவட்ட ஆட்சியராக இருந்த சுகபுத்ரா, சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் செயல் இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார். கோவை வணிக வரிகள் துறை இணை ஆணையராக இருந்த தகாரே சுபம் தியந்தியோராவ், சென்னை மாநகராட்சியின் துணை ஆணையராக (சுகாதாரம்) நியமிக்கப்பட்டுள்ளார். திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையராக இருந்த வீர் பிரதாப் சிங், தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தின் செயல் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திருச்சிராப்பள்ளி மண்டல இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையராக இருந்த பொன்மணி, திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையராகப் பணியமர்த்தப்பட்டுள்ளார். சிப்காட் செயல் இயக்குநராக இருந்த கேத்தரின் சரண்யா, வேலூர் மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட சுற்றுலாத் துறை இயக்குநர் பணியிடமானது, சமூக நலத்துறை இயக்குநர் பணியிடத்திற்கு இணையான அந்தஸ்தும் பொறுப்புகளும் கொண்டது என இந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(0)Comments