சென்னை: சுற்றுலா மற்றும் பண்பாடு துறைகளின் உள்ளே இருந்த சமய அறநிலையங்கள் துறையை தனியாகப் பிரித்து 'இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை' என்ற புதிய துறை உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ் வளர்ச்சி, செய்தித்துறையின் செயலாளர் ராஜாராமன், இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை செயலாளர் பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெளியான அரசாணையில்; "தலைமைச் செயலகத்தில் "இந்து சமய மற்றும் அறநிலையத்துறை" என்ற பெயரில் ஒரு புதிய துறையை உருவாக்க முடிவு செய்துள்ளது. இப்புதிய துறையின் கட்டுப்பாட்டின் கீழ், அதனுடன் தொடர்புடைய துறைத் தலைவரான இந்து சமய மற்றும் அறநிலையத்துறை ஆணையகம் கொண்டுவரப்படும்.
தமிழ்நாடு அரசு வணிக விதிகள், 1978 மற்றும் தலைமைச் செயலகப் பணிக்கூறுகளில் தேவையான திருத்தங்கள் மனித வள மேலாண்மைத்துறையிலிருந்து தனித்தனியாக வெளியிடப்படும்.
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசுச் செயலாளர் வி. ராஜாராமன் மறு உத்தரவு வரும் வரை, இந்து சமய மற்றும் அறநிலையத்துறை அரசுச் செயலாளரின் பதவியை முழு கூடுதல் பொறுப்பாக கவனிப்பார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
(0)Comments