17 வயது சிறுவனை இலக்குவைத்து துப்பாக்கிச்சூடு; சிறுவன் படுகாயம்

17 வயது சிறுவனை இலக்குவைத்து துப்பாக்கிச்சூடு; சிறுவன் படுகாயம்
View on original source
Category: Politics
Share
Archive
Like
Home / 17 வயது சிறுவனை இலக்குவைத்து துப்பாக்கிச்சூடு; சிறுவன் படுகாயம் அத்துருகிரிய கொடகம வீதியில் இன்று செவ்வாய்க்கிழமை இரவு மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 17 வயது சிறுவன் படுகாயமடைந்துள்ளார். சந்தேகநபர்களை கைது செய்ய பொலிஸார் தீவிர விசாரணை. உடனுக்குடன் செய்திகளைப் பெற வாட்ஸ்அப்பில் இணையுங்கள் அத்துருகிரிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொடகம வீதிப் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை (08) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 17 வயதுச் சிறுவன் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் குறித்த சிறுவனை இலக்கு வைத்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் அல்லது துப்பாக்கிச் சூட்டை நடத்திய சந்தேகநபர்கள் தொடர்பான எந்தவிதத் தகவல்களும் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை அடையாளம் கண்டு, அவர்களைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை அத்துருகிரிய பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர். கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும். WRITTEN BY ஆசிரியர் குழு (Editorial Team) என்பது News21 இன் செய்தியறை அணியாகும். இந்தக் குழு துல்லியமான, நம்பகமான மற்றும் காலத்திற்கேற்ற செய்திகளை வழங்க இணைந்து செயல்படுகிறது. →

(0)Comments

 

A note on cookies

Newshunt uses essential cookies to keep you signed in and to remember your language and country, so the site works the way you expect. With your permission, we'd also like to use analytics cookies to understand how people use Newshunt and improve it over time.

Accepting only affects analytics. To learn more, view our Privacy Policy or Terms & Conditions.