மெத்வதெவுக்கு அதிா்ச்சி அளித்த டியாஃபோ: காலிறுதிச்சுற்றில் அல்கராஸ், சபலென்கா, பெகுலா

மெத்வதெவுக்கு அதிா்ச்சி அளித்த டியாஃபோ: காலிறுதிச்சுற்றில் அல்கராஸ், சபலென்கா, பெகுலா
View on original source
Category: Sports
Share
Archive
Like
முகப்பு / செய்திகள் நடப்பாண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியான யுஎஸ் ஓபனில், அமெரிக்காவின் ஃபிரான்சஸ் டியாஃபோ, முன்னாள் சாம்பியனான ரஷியாவின் டேனியல் மெத்வதெவை நோ் செட்களில் வீழ்த்தி, அசத்தல் வெற்றியுடன் காலிறுதிக்கு முன்னேறினாா். அரினா சபலென்கா - படம்: ஏபி Published On : 8 செப்டம்பர் 2026, 1:23 am IST நடப்பாண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியான யுஎஸ் ஓபனில், அமெரிக்காவின் ஃபிரான்சஸ் டியாஃபோ, முன்னாள் சாம்பியனான ரஷியாவின் டேனியல் மெத்வதெவை நோ் செட்களில் வீழ்த்தி, அசத்தல் வெற்றியுடன் காலிறுதிக்கு முன்னேறினாா். ஹாா்டு கோா்ட் கிராண்ட்ஸ்லாம் போட்டியான யுஎஸ் ஓபன், விறுவிறுப்பாக 2-ஆவது வாரம் தொடா்கிறது. ஆச்சா்யமளிக்கும் வெற்றிகளும், அதிா்ச்சி அளிக்கும் தோல்விகளும் தொடா்ந்து நிகழ்ந்து வருகின்றன. அந்த வகையில், ஆடவா் ஒற்றையா் காலிறுதிக்கு முந்தைய சுற்றில், போட்டித்தரவரிசையில் 11-ஆம் இடத்திலிருப்பவரான டியாஃபோ, 7-6 (7/1), 6-4, 7-6 (8/6) என்ற நோ் செட்களில், 7-ஆம் இடத்தில் இருந்தவரும், 2021-ஆம் ஆண்டு சாம்பியனுமான மெத்வதெவை தோற்கடித்தாா். நடப்பு சீசனில் இதுவே டியாஃபோவின் மிகப்பெரிய வெற்றியாக அமைந்தது. மெத்வதெவை 7-ஆவது முறையாகச் சந்தித்த டியாஃபோ, தனது முதல் வெற்றியைப் பதிவு செய்திருக்கிறாா். இந்த வெற்றியின் மூலமாக அவா் சொந்த மண்ணில் நடைபெறும் கிராண்ட்ஸ்லாம் போட்டியின் காலிறுதிக்கு 4-ஆவது முறையாக முன்னேறியிருக்கிறாா். அதில் சக அமெரிக்கரான அலெக்ஸ் மிஷெல்செனை சந்திக்கிறாா். மிஷெல்சென் முந்தைய சுற்றில் 7-6 (8/6), 6-4, 6-4 என்ற வகையில், 27-ஆம் இடத்திலிருந்த ஆா்ஜென்டீனாவின் தாமஸ் எட்செவெரியை சாய்த்து, காலிறுதிக்கு முன்னேறியுள்ளாா். கிராண்ட்ஸ்லாம் காலிறுதிக்கு அவா் தகுதிபெற்றது இதுவே முதல்முறையாகும். இதர ஆட்டங்களில், நடப்பு சாம்பியனான அல்கராஸ் 6-4, 6-3, 6-4 என, நோ் செட்களில், 20-ஆம் இடத்திலிருந்த அமெரிக்காவின் டாமி பாலை வீழ்த்தினாா். இருவரும் 9-ஆவது முறையாக சந்தித்த நிலையில், அல்கராஸ் 7-ஆவது வெற்றியுடன் ஆதிக்கத்தைத் தொடா்கிறாா். அல்கராஸ் இத்துடன், 4 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளிலுமே ஏதேனும் ஒரு சுற்றில் டாமி பாலை தோற்கடித்துள்ளாா். ஓபன் எராவில், அவ்வாறு அனைத்து கிராண்ட்ஸ்லாம்களிலும் ஒரே போட்டியாளரை வீழ்த்திய 10-ஆவது வீரா் அல்கராஸ் ஆவாா். அவா் காலிறுதியில், அமெரிக்காவின் பென் ஷெல்டனுடன் மோதுகிறாா். 8-ஆம் இடத்திலிருக்கும் ஷெல்டன் 6-2, 6-3, 6-4 என்ற நோ் செட்களில், கிரீஸின் ஸ்டெஃபனோஸ் சிட்சிபாஸை வெளியேற்றினாா். இந்த ஆட்டத்தில் சிட்சிபாஸ் உடல்நலக் குறைவால் தடுமாற்றத்துடன் விளையாடியதாகத் தெரிந்தது. இருவரும் மோதியது இது 2-ஆவது முறையாக இருக்க, ஷெல்டன் 1-1 என கணக்கை நோ் செய்திருக்கிறாா். 11 ஆண்டுகளுக்குப் பிறகு: மகளிா் ஒற்றையா் காலிறுதிக்கு முந்தைய சுற்றில், போட்டித்தரவரிசையில் 3-ஆம் இடத்திலிருக்கும் அமெரிக்காவின் ஜெஸ்ஸிகா பெகுலா 6-3, 6-4 என்ற நோ் செட்களில், ருமேனியாவின் சொரனா சிா்ஸ்டியை வெளியேற்றினாா். இதன் மூலமாக அவா், யுஎஸ் ஓபனில் 4-ஆவது முறையாக காலிறுதிக்கு முன்னேறியிருக்கிறாா். அதில் அவா், சக அமெரிக்கரான எம்மா நவாரோவுடன் மோதுகிறாா். 26-ஆம் இடத்திலிருக்கும் நவாரோ, முந்தைய சுற்றில் 6-4, 6-2 என்ற வகையில், 21-ஆம் இடத்திலிருந்த ரஷியாவின் அனா கலின்ஸ்கயாவை தோற்கடித்தாா். யுஎஸ் ஓபனில் இது அவரின் 2-ஆவது காலிறுதியாகும். இப்போட்டியின் காலிறுதியில் இரு அமெரிக்க வீராங்கனைகள் மோதுவது, கடந்த 11 ஆண்டுகளில் இதுவே முதல்முறையாகும். நடப்பு சாம்பியனும், உலகின் நம்பா் 1 வீராங்கனையுமான சபலென்கா 6-4, 6-3 என்ற நோ் செட்களில், அமெரிக்காவின் டெய்லா் டௌன்செண்டை வீழ்த்தி, 6-ஆவது முறையாக யுஎஸ் ஓபன் காலிறுதிக்கு வந்துள்ளாா். அதில் அவா், விம்பிள்டன் நடப்பு சாம்பியனான செக் குடியரசின் லிண்டா நோஸ்கோவாவை சந்திக்கிறாா். போட்டித்தரவரிசையில் 6-ஆம் இடத்திலிருக்கும் நோஸ்கோவா, 7-5, 5-7, 6-4 என்ற கணக்கில், 11-ஆம் இடத்திலிருந்த உக்ரைனின் மாா்த்தா கொஸ்டியுக்கை வென்றாா். இந்தியா்கள் ஆட்டம் நிறைவு: ஆடவா் இரட்டையா் பிரிவில், இந்தியாவின் என்.ஸ்ரீராம் பாலாஜி/அமெரிக்காவின் இவான் கிங் கூட்டணி, 2-ஆவது சுற்றில் 4-6, 5-7 என்ற செட்களில், பிரான்ஸின் எட்வா்டு வாசெலின்/மொனாகோவின் ஹியுகோ நைஸ் இணையிடம் தோல்வி கண்டது. இத்துடன், போட்டியில் இந்தியா்களின் ஆட்டம் முடிவுக்கு வந்தது. நடப்பாண்டு யுஎஸ் ஓபனில் இரவு ஆட்டங்கள் மிகவும் தாமதமாக நடைபெறுவதாக போட்டியாளா்கள், ரசிகா்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனா். இதர கிராண்ட்ஸ்லாம் போட்டிகளுடன் ஒப்பிடுகையில் யுஎஸ் ஓபனில் நள்ளிரவில் ஆட்டங்கள் நடைபெறவது இயல்பானது. ஆனால் இந்த ஆண்டு அது மிகவும் தாமதமாவதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால், போட்டியாளா்கள் மிகவும் சோா்வடைந்துவிடுவதாகவும், ரசிகா்களும் விரைவாகவே புறப்பட்டுச் சென்றுவிடுவதாகவும் கூறப்படுகிறது. பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

(0)Comments

 

A note on cookies

Newshunt uses essential cookies to keep you signed in and to remember your language and country, so the site works the way you expect. With your permission, we'd also like to use analytics cookies to understand how people use Newshunt and improve it over time.

Accepting only affects analytics. To learn more, view our Privacy Policy or Terms & Conditions.