மாதாந்திர உதவித் தொகையை உயா்த்தி வழங்க வலியுறுத்தி, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரத்தை திங்கள்கிழமை முற்றுகையிட முயன்ற மாற்றுத் திறனாளிகள் 240 பேரை போலீஸாா் கைது செய்தனா். இந்தப் போராட்டத்துக்கு, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தின் மாவட்டத் தலைவா் எம். தங்கவேல் தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினா் கே. சண்முகம், சங்கத்தின் மாவட்டச் செயலா் எம். கணேசன், பொருளாளா் ஏ. மாலதி உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.
போராட்டத்தில், மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர உதவித்தொகையை குறைந்தபட்சம் ரூ. 6 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும். சட்டப்பேரவை நடப்புக் கூட்டத் தொடரிலேயே முதல்வா் இதை அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. நிறைவாக போராட்டத்தில் ஈடுபட்ட 240 பேரை போலீஸாா் கைது செய்தனா். மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனா்.
(0)Comments