ஆனால், முதல்வர் தனது பதிலுரையில் எந்தவித ஆதாரமும் இல்லாத குற்றச்சாட்டுகளை எங்கள் மேல் வைக்க ஆரம்பித்தார். நானும், எங்கள் உறுப்பினர்களும் எழுந்து, 'முதல்வர் வெளியில் பேசுவதை இங்கே பேசுகிறார். அதுக்கு பதில் கூறவேண்டும், நீங்கள் வாய்ப்பு கொடுங்கள்' என்று பேரவைத் தலைவரிடம் கேட்டோம். ஆனால் வாய்ப்பு மறுக்கப்பட்டது.
முதலில், எதிர்க்கட்சி தலைவருக்கு வாய்ப்பு கொடுக்கிறேன் என்று கூறினார், பின்னர் மறுத்து விட்டார். எனவே, நாங்கள் எங்களுடைய எதிர்ப்பை தெரிவிக்க, வெளிநடப்பு செய்துள்ளோம்.
'டைவர்ஷன் டாக்டிக்ஸ்'
சட்டம் ஒழுங்கு சம்பந்தமாக நாங்கள் கேட்ட எந்தக் கேள்விக்கும் பதில் கூறாமல், வெறும் பஞ்ச் டயலாக்குகள், 'டைவர்ஷன் டாக்டிக்ஸ்'தான் முதல்வரின் பேச்சில் இருந்தது. உதாரணத்துக்கு அவர்களுடைய சட்டப்பேரவை உறுப்பினர்கள், அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. அதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள் என்று நாங்கள் கேட்டிருந்தோம்.
(0)Comments