நாமலின் கைதின் பின்னர் விசமிகளால் இலக்கு வைக்கப்படும் தமிழர் கிராமங்கள்! வெளியான காணொளி

நாமலின் கைதின் பின்னர் விசமிகளால் இலக்கு வைக்கப்படும் தமிழர் கிராமங்கள்! வெளியான காணொளி
View on original source
Category: Politics
Share
Archive
Like
வனவளத் திணைக்கள அதிகாரிகள் என்று தங்களை அழைத்துக்கொண்ட குழுவினர், வாகரை பிரதேசத்தில் உள்ள மக்களின் வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து பொருட்களைச் சேதப்படுத்தியுள்ள காணொளியொன்று வெளியாகியுள்ளது. இந்தச் சம்பவம் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்ட அதே காலப்பகுதியில் நிகழ்ந்துள்ளது. இது இன ரீதியான மோதல்களைத் தூண்டும் திட்டமிட்ட முயற்சியாக இருக்கலாம் என்று கூறப்படுகின்றது, மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ஸ்ரீநாத் உடனடியாகச் சம்பவ இடத்திற்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட மக்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர். இந்தக் கிராமம் வரலாற்று ரீதியாகவே விவசாய நிலமாகவும், மக்களின் வாழ்வாதாரமாகவும் இருந்து வருகிறது. இத்தகைய சம்பவங்கள் அந்த மக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் செயலாகப் பார்க்கப்படுகிறது. இந்தச் சம்பவத்தின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது குறித்து பொதுமக்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளன. மேலும், இந்தச் சம்பவத்தின் பின்னணியில் மகிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்களான ரொஷான் ரணசிங்க, கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் திலித் ஜெயவீர ஆகியோரின் செயற்பாடுகள் இருக்கலாம் எனத் தொடர்ந்து சந்தேகம் வெளியிடப்படுகிறது. இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக எடுத்து வருகின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி... அமெரிக்க தடைக்கு பதிலடி! ஈரானின் அதிரடி அறிவிப்பு ராஜபக்ச குடும்பத்தை தொடரும் விசாரணைகள்! மீண்டும் சிக்கலில் சிக்கிய ஷிரந்தி ராஜபக்ச

(0)Comments

 

A note on cookies

Newshunt uses essential cookies to keep you signed in and to remember your language and country, so the site works the way you expect. With your permission, we'd also like to use analytics cookies to understand how people use Newshunt and improve it over time.

Accepting only affects analytics. To learn more, view our Privacy Policy or Terms & Conditions.