ச ய த ப ப ர வ

மொழிக்கல்வியும் கருத்தாடலும்

Image
'யாரிடம் எப்​படிப் பேசவேண்​டும் என்று தெரி​யாமல் பேசுகிறாய்!'', 'அவர் பேச்​சிலேயே எதை​யும் சாதித்​து​விடு​வார்!', 'நீங்​கள் என்​னிடம் உதவி கேட்​கிறீர்​களா? அல்​லது உத்​தரவு போடு​கிறீர்​களா?', 'உங்​களைக் குறை சொல்வதற்​காக நான் இதைச் சொல்​ல ​வர​வில்​லை' - இவை​போன்ற பல தொடர்​களை நாம் கேட்​டிருப்​போம். இங்கு ஒன்று தெளி​வாகத் தெரி​கிறது. பேசுபவருக்​குத் தமிழ் இலக்​கணத்​தில் நிறைய அறிவு இருக்​கலாம். ஆனால், நடை​முறை​யில் அவர் பயன்​படுத்​துகிற தொடர்​கள் அவரது பேச்​சின் நோக்​கத்தைச் சரி​யாக வெளிப்​படுத்தவில்லை. மறு​புறம், கேட்​பவரும் பேசுபவரின் நோக்​கத்​தைச் சரி​யாகப் புரிந்​து​கொள்​ள இயலாமல் போகிறது. நம்​மைச் சுற்​றி​யுள்​ளவர்​களு​டன் நல்ல உறவு​களை உரு​வாக்​கித் தக்​க​வைத்​துக்​கொள்ள மிக​வும் உதவுவது நமது பேச்​சு​முறையே. ஒரு​வரின் சரி​யான பேச்​சு​முறை​யானது பகைவர்களை​யும் நண்​பர்​களாக மாற்​றியமைக்​கும்; அது​போன்று, தவறான பேச்​சு​முறை​யானது நண்​பர்​களை​யும் பகைவர்​களாக ஆக்​கி​விடும். மொழிக்​கல்வி: மாணவர்​களுக்​குப் பள்​ளி​களில் தமிழ்ச்​சொற்​கள், தொடரமைப்​பு​கள், அவற்​றின் இலக்​கணக் கூறுகள் ஆகிய​வற்​றைப்​ பற்​றி மட்​டுமே கற்​றுக்​கொடுத்​தால் போதாது. அவற்​றைப்பயன்​படுத்​தி, தன்​னைச் சுற்​றி​யுள்​ளவர்​களிடம் பலவகை​யான பேச்​சுச்​செயல்​களை எவ்​வாறு மேற்​கொள்​வது என்​ப​தைக் கற்​றுக்​கொடுக்​க வேண்​டும். பேச்​சுச் செயல்​களுக்​குக்​காகத்​தான் இலக்​கணக் கல்வி​யே த​விர, இலக்​கணப்​ பாடத்​தில் வெறும் மதிப்​பெண்​கள் பெறு​வதற்கு இல்​லை.
மொழிக்கல்வியும் கருத்தாடலும்
View on original source
Share
Archive
Like

(0)Comments

 

Related Opinion

A note on cookies

Newshunt uses essential cookies to keep you signed in and to remember your language and country, so the site works the way you expect. With your permission, we'd also like to use analytics cookies to understand how people use Newshunt and improve it over time.

Accepting only affects analytics. To learn more, view our Privacy Policy or Terms & Conditions.