ச .வ ண க ப ல

உக்கிரம்கொள்ளும் யதார்த்தம்

Image
வண்​ணநில​வன், கந்​தர்​வன் போன்ற படைப்​பாளி​கள் நுட்​ப​மான முறை​யில் யதார்த்த உலகினைக் கதைகளில் விவரித்த போக்​குக்கு மாறாக, உக்​கிர​மான யதார்த்​தத்தை தமிழில் முதன்​முதலில் பதிவு செய்​தவர் திலீப்குமார். மிகை​யுணர்ச்​சிகளை​யும் போலி மதிப்​பீடு​களை​யும் முற்​றாகத் துறந்த அப்​பட்​ட​மான சித்​திரங்​களால் உரு​வான நிதர்​சனமே அவரது படைப்​புல​கம். அந்த வகை​யில், திலீப்​கு​மாரின் மிக முக்​கிய​மான சிறுகதைகளுள் ஒன்று 'மூங்​கில் குருத்​து'. கதை​யின் நாயகன் கிருஷ்ணாஜி​ராவ், தையல் கடை​யில் பத்து பேரோடு வேலை செய்​கிறவன். மூல வியாதி முற்றி அப்பா சீரழிந்து இறந்​ததைப் பார்த்​தவன். இவனது முதலாளி பத்​ம​நாத்​ராவ், சுபீட்​சத்​திலிருந்து தரித்​திரத்துக்​குச் சரிந்​தவர். மல்​யுத்த வீரன் கிங்​காங்​குக்கு சூட், பெருந்​தலை​வர் காம​ராஜருக்​குக் கதர்ச் சட்டை தைத்​துக் கொடுத்த புகழுக்​குரிய​வர். குதிரைப் பந்​த​யம், ஆங்​கிலோ-இந்​தி​யப் பெண்​களு​ட​னான தொடர்​பு, சினிமா தொழில் எனப் பணத்தை இழந்​தவர். அவருக்கு நான்கு குழந்​தைகள். புதுப் படங்​கள் திரை​யிட்​டால் நண்​பர்​களோடு படத்துக்​குப் போவார்; சிகரெட் பிடிப்​பார்; வேலை செய்​பவர்​களைக் கண்​டபடி ஏசு​வார். அவரது பெரிய மகள் பக்​கத்து வீட்​டில் வார இதழ் வாங்கி வரு​வதைப் பார்த்​தால் அடிஅடி​யென்று அடிப்​பார்; நண்​பர்​களோடு குடித்து மகிழ்​வார். இவன் கடை​யின் கணக்கு வழக்கு பார்ப்​ப​தோடு, அவரது குழந்​தைகளுக்​கும் பாடம் சொல்​லிக்கொடுப்​பான். அவர் மராத்​தி, இவன் குஜ​ராத்​தி.
உக்கிரம்கொள்ளும் யதார்த்தம்
View on original source
Share
Archive
Like

(0)Comments

 

Related Opinion

A note on cookies

Newshunt uses essential cookies to keep you signed in and to remember your language and country, so the site works the way you expect. With your permission, we'd also like to use analytics cookies to understand how people use Newshunt and improve it over time.

Accepting only affects analytics. To learn more, view our Privacy Policy or Terms & Conditions.